மகேஷ்பாபு நடிப்பில் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிவரும் படம் `வாரணாசி'. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் அறிமுக விழா மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டது.
இப்படத்தில் மகேஷ் பாபு ருத்ராவாகவும், ப்ரியங்கா சோப்ரா மந்தாகினியாகவும், பிருத்விராஜ் சுகுமாரன் கும்பாகவும் நடித்து வருகின்றனர். டைம் டிராவல் மற்றும் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி வருகிறது படம். இந்தக் கதை அட்வென்சர் வகையில் இதிகாச கதையையும் உள்ளுக்குள் வைத்திருக்கும் படம் என்பதை படத்தின் அறிமுக டீசர் நமக்கு உணர்த்தியது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவே தயாராகிவரும் இப்படம் ஏப்ரல் 7, 2027 வெளியாகும் என அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து வரும் இப்படம், ஐமேக்ஸ் திரைக்காக படம்பிடிக்கப்பட்டு வருகிறது.