சினிமா

பாகுபலி 2 மெகா ஹிட்: ஜாலி டூரில் ராஜமவுலி

பாகுபலி 2 மெகா ஹிட்: ஜாலி டூரில் ராஜமவுலி

webteam

பாகுபலி 2 படம் இந்தியா முழுவதும் மெகா ஹிட்டானதை அடுத்து, அதன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி குடும்பத்துடன் டூர் சென்றுள்ளார்.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உட்பட பலர் நடித்த படம், ‘பாகுபலி’. தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம் உருவானது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படமும் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது. வசூலில் இந்தப் படம் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.

’பாகுபலி’க்காக கடந்த நான்கைந்து வருடம் இடைவிடாமல் பணியாற்றி வந்தார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இப்போது படம் ரிலீஸ் ஆகி ஹிட்டாகி இருப்பதால், குடும்பத்துடன் லண்டனுக்கு டூர் சென்றுள்ளார். நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்ற அவர் இன்னும் பத்து நாட்கள் அங்கு இருப்பார் என்று கூறப்படுகிறது.