சினிமா

2022 ஜனவரி 7-ல் வெளியாகும் ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’?

2022 ஜனவரி 7-ல் வெளியாகும் ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’?

sharpana

ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ படம் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

வரும் அக்டோபர் 13-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கடந்த வாரம்தான் படப்பிடிப்பை முடித்தது படக்குழு.

இதனால், ஏற்கனவே அறிவித்த அக்டோபர் 13 ஆம் தேதிக்குப் பதில் புதிய தேதியை படக்குழு அறிவிக்கவுள்ளதாகவும், வரும் ஜனவரி 7 ஆம் தேதி வெளியிட தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.