சினிமா

500, 1000 செல்லாமல் போனது பற்றி பேசும் ரஹ்மானின் புதிய பாடல்

500, 1000 செல்லாமல் போனது பற்றி பேசும் ரஹ்மானின் புதிய பாடல்

webteam

500, 1000 பணம் செல்லாது என்று அறித்ததை பற்றி பேசும் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய பாடல் இசை பிரியர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த வருடம் நவம்பர் 8 அன்று திடீரென்று நள்ளிரவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தார். அதை கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்தது. அவரது அறிவிப்பால் நாடு முழுவதும் மக்கள் வங்கி வாசல்களில் வரிசையில் காத்து கிடந்தனர். ஏடிஎம் வாசல்களில் பணம் கிடைக்காமல் திண்டாடினர். வடமாநிலங்களில் பல பகுதிகளில் பணத்தை எடுக்கவும் திரும்ப செலுத்தவும் சில கி.மீட்டர் தொலைவுக்கு வரிசையில் நின்றனர் மக்கள்.
கறுப்பு பணத்தை ஒழிக்க இந்த சர்ஜிக்கல்ஸ்ட்ரைக் தேவை என மோடி அறிவித்தார். அந்த வார்த்தையை அதுவரை மக்கள் அதிகம் பயன்படுத்தியது கூட இல்லை. 

இந்த அறிவிப்பால் நாட்டின் பொருளாதாரம் சரிவை கண்டுள்ளது என பாஜகவின் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சிங்கா கூறிவருகிறார். ஏற்கெனவே முன்னாள் மத்திய தியமைச்சர் ப.சிதம்பரமும் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் The Flying Lotus என்ற பெயரில் புதிய சிம்பனி ஆர்கெஸ்ட்ரா இசை கோர்வையில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். முழுக்க இசையால் நிரம்பியுள்ள அதில் பிரதமர் நரேந்திர மோடி குரலில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. அரசியல் சாயமே தன் மீது விழாமல் கவனமாக இருந்து வரும் ரஹ்மானிடம் இருந்து இதைபோல ஒரு இசை கோர்வையை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆகவே அவரது இசை பிரியர்கள் அவரது முயற்சிக்காக வாழ்த்து தெரிவித்து வருன்றனர்.

இது குறித்து ரஹ்மான், ஒரு சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்விற்குக் கிடைத்த வெளியே பேசப்படாத பாராட்டையும், எழுந்த மிகப்பெரிய சீற்றத்தையும் இசை மொழியில் சொல்ல முயற்சித்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.