ராகவா லாரன்ஸ் மஹாவீர் கர்ணா/இன்ஸ்டா
சினிமா

ரூ.150 கோடி செலவு.. ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’!

ரூ.150 கோடி பொருட்செலவில் தயாராகவுள்ள இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் படமாக்குகின்றனர்.

Johnson

இதிகாச கதைகளில் ஒன்றான கர்ணன் கதையை தழுவி பல படங்கள் உருவாக்கி இருக்கின்றன. இப்போது அந்த வரிசையில் புதிய படம் ஒன்று உருவாகிறது. ‘மஹாவீர் கர்ணா’(MahaveerKarna) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், கர்ணனாக ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாக இருக்கிறது. இத்திரைப்படத்துக்காக பிரம்மாண்டமான சிறப்பு அரங்குகள், புராண காலத்தை கண்முன் நிறுத்தும் கலை வடிவமைப்புகள், அசரவைக்கும் போர்க்காட்சிகள் மற்றும் உலகத்தர VFX தொழில்நுட்பம் என அனைத்தும் சேர்ந்து, மொத்தத்தில் ஒரு பிரமிக்க வைக்கும் காட்சி விருந்தாக இப்படம் உருவாக்கப்பட இருக்கிறது. ரூ.150 கோடி பொருட்செலவில் தயாராகவுள்ள இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் படமாக்குகின்றனர்.

பென் மூவீஸ் (PEN MOVIES ) ஜெயந்திலால் கடா வழங்க (JAYANTILAL GADA PRESENTS), ஆர்வி ஸ்டூடியோஸ் - ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ்  (RV STUDIOS & SRI NEELADRI PRODUCTIONS) இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. கர்ணனின் காவியத்தை இந்தியத் திரைகளில் உயிர்ப்பெறச் செய்ய வருகிறது ‘மஹாவீர் கர்ணா’. படத்தின் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன. ‘மஹாவீர் கர்ணா’ உலகெங்கும் 2027-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடத்தில் வெளியாகும்.