சினிமா

ராகவா லாரன்ஸ் திறந்த அம்மா கோயில்!

ராகவா லாரன்ஸ் திறந்த அம்மா கோயில்!

webteam

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்கு கட்டியுள்ள கோயில் அன்னையர் தினமான இன்று திறந்து வைக்கப்பட்டது.

நடிகர் ராகவா லாரன்ஸ் அம்பத்தூரில் ராகவேந்திரருக்கு கோயில் கட்டியுள்ளார். தற்போது அந்த கோயிலுக்கு எதிராக, தனது அம்மா கண்மணிக்கும் கோயில் கட்டியுள்ளார். உலகிலேயே அம்மாவிற்காக கோவில் கட்டியுள்ள முதல் நடிகர் ராகவா லாரன்ஸ்தான். இந்த கோயில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந்த கோயிலில், அவர் அம்மா கண்மணியின் 5 அடி உயர முழு உருவச் சிலையோடு, 13 அடி உயரம் உள்ள காயத்திரி தேவியின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

இதற்காக இன்று நடந்த விழாவில் பிரபல ஸ்டன்ட் இயக்குனரும் நடிகருமான சூப்பர் சுப்பராயன், தயாரிப்பாளர் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், இயக்குனர் சாய்ரமணி, லாரன்சின் தம்பி எட்வின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.