நடிகர் ராகவா லாரன்ஸ் திருமுல்லைவாயிலில் உள்ள ராகவேந்திரா ஆலயத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடினர்.
ராகவா லாரன்சால் கட்டப்பட்ட ராகவேந்திரா கோவிலின் 8 ஆண்டு துவக்க விழா மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் லாரன்ஸ் தாம் பாதுகாக்கும் 60 ஆதரவற்ற குழந்தைகளுடன் கலந்து கொண்டு புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினர். தொடர்ந்து கோவிலுக்கு வந்த பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ் தன் ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் மரம் வளர்ப்பது மிகவும் முக்கியமானது என்றும் வர்தா புயலால் நாம் மரங்களை இழந்துள்ளோம். மரம் வளர்க்க விரும்புவோர் லாரன்ஸ் சார்டபுல் ட்ரஸ்டை தொடர்பு கொண்டால் மரக்கன்றுகள் வீடு தேடி கொண்டு வரப்படும் என தெரிவித்தார். இது வரை சுமார் 3500 மரங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.