சினிமா

பல்லியுடன் செல்ஃபி: ராதிகா ஆப்தே வைரல் போட்டோ

பல்லியுடன் செல்ஃபி: ராதிகா ஆப்தே வைரல் போட்டோ

webteam

நடிகை ராதிகா ஆப்தே பல்லியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. அவ்வபோது சினிமாவில் நடிகைகள் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து மிக வெளிப்படையாக கருத்து தெரிவித்து கவனத்தை ஈர்த்து வருபவர். 

இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே ஒரு பல்லியை முகத்தில் வைத்து கொண்டு செல்பி எடுத்திருக்கிறார். பொதுவாக கரப்பான் பூச்சியை பார்த்தாலே பயந்து நடுங்கும் நடிகைகள் மத்தியில் ராதிகாவின் இந்தத் துணிச்சல் சமூக வலைதள வாசிகள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் புகைப்படம் பார்த்து பலர் லைக்ஸ் இட்டு வருகிறார்கள். மேலும் அதிகமாக பகிர்ந்து கொண்டும் வருகிறார்கள். இது நிஜ பல்லிதானா? இல்லை பொம்மையா? என்பது குறித்து விவரம் தெரியவில்லை. ஆனால் இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.