நடிகை ராதிகா ஆப்தேவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரோல் ஆகி வருகிறது.
கலாச்சார காலவர்கள் அதிகம் உள்ள நாடு நம்ம இந்தியா. இந்த நாட்டில் அதிகம் சுதந்திரமாக இருக்க முடியுமா என்ன? ஆகவேதான் நடிகை ராதிகா ஆப்தே தனது இன்ஸ்டாகிராமில் பிகினி உடையில் கடற்கரையில் உட்கார்ந்திருப்பதைபோல ஒரு படத்தை பதிவிட்டுள்ளார். அவருடன் அவரது நண்பர் சட்டையே போடாமல் டவுசர் உடன் உட்கார்ந்திருக்கிறார். இதற்கு மேல் ஒருபடி மேலே சென்ற ராதிகா கையில் மதுபான கோப்பையையும் வைத்திருக்கிறார்.
இந்த இருவரும் கடற்கரையில் உல்லாசமாக இருக்கிறார்கள். ராதிகா தொளதொள என லேசான உடையை போட்டிருப்பதும் பிகினியில் இருப்பதும் சமூக வலைதள வாசிகளுக்கு பிரச்னையாகி இருக்கிறது. ஆகவே அந்தப் படம் ட்ரோல் ஆகி வருகிறது. இது குறித்து ராதிகா, “எனக்கு தெரியாது. சிலர் அந்தப் படம் ட்ரோல் ஆகி வருவதாக கூறினார்கள். நான் என்ன கடற்கரையில் புடவையையா கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.