ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த 80களின் பிரபல நடிகைகள் அம்பிகா, ராதா, தற்போது சீரியல் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். இந்நிலையில், தன் அக்கா அம்பிகா மற்றும் சகோதரர் காசோலை வழியாக ரூ.46 கோடி மோசடி செய்ததாக ராதா சென்னை காவலர் ஆணையரிடம் புகார் அளித்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்சினிமாவின் 80ஸ் காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஹீரோயின்களாக வலம்வந்தவர்கள் நடிகை அம்பிகா மற்றும் ராதா. அக்கா, தங்கைகளாக இருந்தபோதும் தங்களுடைய நடிப்பு திறமையால் தங்களுக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்த இவர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர்கள். தற்போது சினிமாவிலிருந்து விலகியிருக்கும் இவர்கள், சின்னத்திரையில் சீரியல் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகின்றனர்.
இந்தசூழலில் தான் தன்னுடைய அக்கா அம்பிகா பண மோசடி செய்துவிட்டதாக சென்னை காவலர் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா மோசடி புகார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலின் படி, தன்னுடைய சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் சுமார் 46 கோடி ரூபாய் பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக புகார் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.