சினிமா

“விஜய்சேதுபதியுடன் நடிக்க ஆர்வமா இருக்கேன்” - ராஷி கண்ணா

“விஜய்சேதுபதியுடன் நடிக்க ஆர்வமா இருக்கேன்” - ராஷி கண்ணா

webteam

விஜய்சேதுபதியின் புதிய படத்தில் நாயகியாக ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

‘வாலு’,‘ஸ்கெட்ச்’ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய் சந்தர். இவர் இயக்கப்போகும் புதிய படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தில் சேதுபதிக்கு ராஷி கண்ணா ஜோடியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மற்றும் பாடகியான ராஷி கண்ணா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருபதிவை வெளியிட்டுள்ளார். 

அதில், “மிக மகிழ்ச்சியான அறிவிப்பு. என்னுடைய விருப்பமான நடிகர் விஜய்சேதுபதியுடன் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். உண்மையாகவே இந்தப் படக்குழுவுடன் இணைந்து பணிபுரிவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். மிகுந்த எதிர்பார்ப்புடனும் இருக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக தெரிகிறது. மேலும் படத்தை விஜயா புரடெக்‌ஷன் கம்பெனி தயாரிக்கிறது. இப்படத்தில் காமெடியனாக ‘பரோட்டா’ சூரி நடிக்க இருக்கிறார். இன்னொரு நாயகி பாத்திரத்தில் நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ராஷி கண்ணா ஏற்கெனவே நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்கமறு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய்சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்போது அவர் சீனு ராமசாமி இயக்கத்தில் ‘மாமனிதன்’ படப்பிடிப்பில் மும்முரமாக இருந்து வருகிறார்.