சினிமா

“ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் திரைத்துறையை பாதிக்கும்” - ஃபெப்சி தலைவர் செல்வமணி

Sinekadhara

ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் திரைப்படத் துறையை பாதிக்கும் என ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்திருக்கிறார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வமணி, “நான் 1992இல் முடித்த திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து சான்றிதழ் வாங்கினேன். அதன்பிறகு மேலும் ஒரு பிரச்னை எழவே, நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. அந்த வழக்கை முடிக்க எனக்கு 14 வருடங்கள் எடுத்தது. தணிக்கைக் குழு அனுமதித்த திரைப்படத்திற்கு மத்திய அரசோ அல்லது மத்திய அரசுக்கு ஆதரவான ஒரு குழுவோ எப்போது வேண்டுமானாலும் தடை விதிக்கலாம் என்ற நிலை வந்துவிட்டால் அந்த திரைப்படத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.

எனவே தணிக்கை கொடுத்தபிறகு திரும்பப்பெறும் அதிகாரம் கூடாது. அவரவர் ஒரு கருத்தை வைத்து காட்சிகளை துண்டிக்கச் சொல்வர். கண்டிப்பாக ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் திரைத்துறையை பாதிக்கும்’’ என அவர் தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.