பிரபல ஹாலிவுட் இயக்குநர்களில் முக்கியமானவர் க்வெண்டின் டரண்டினோ. 2015-ல் வெளியான ஹேட்ஃபுல் எய்ட் திரைப்படத்துக்குப் பின் எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்த இவர், தற்போது அடுத்தப் படத்துக்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறார். ப்ராட் பிட், ஜெனீஃபர் லாரன்ஸ் ஆகியோரிடம் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான கதையை, 1969-ல் நிகழ்ந்த மேன்சன் கொலை சம்பவத்தை மையப்படுத்தி எழுதியிருக்கிறார் இயக்குநர் க்வெண்டின் டரண்டினோ.
க்வெண்டின் டரண்டினோ கில் பில், ஜான்கோ அன்செய்ண்டு உள்ளிட்ட 9 படங்களை இயக்கியுள்ளார். இவரின் படங்களுக்கு உலக அளவில் பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.