சினிமா

புதுச்சேரி: ஏழைக்குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

புதுச்சேரி: ஏழைக்குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

sharpana

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதரம் இன்றி தவித்த ஏழைக் குடும்பங்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மளிகைப்பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை பரவலால் அதிகம் பாதித்த தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா, கேரளா, உத்திரபிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இப்போதுவரை ஊரடங்கு அமலில் தொடர்கிறது.

இதனால், வாழ்வாதரமின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உதவ அஜித், விஜய் ரசிகர்கள் களத்தில் குதித்து உதவி வருகிறார்கள். தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரியிலும் தங்களது சேவையை ஆர்வமுடன் சேவையை தொடர்கிறார்கள்.

சமீபத்தில், பாண்டிச்சேரி ’பிரெஞ்ச் சிட்டி அஜித் ரசிகர்கள்’ கடந்த 20 நாட்களாக ஏழைகளுக்கு உணவு வழங்கிவரும் நிலையில், பாண்டிச்சேரி விஜய் ரசிகர்களும் தற்போது  25 ஏழைக்குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகைப்பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை அளித்து உதவி செய்துள்ளனர்.