சினிமா

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய தயாரிப்பாளர் ’கோகுலம்’ கோபாலன்!

sharpana

கொரோனா தடுப்புப்பணிகளுக்காக  தயாரிப்பாளர் 'கோகுலம்' கோபாலன் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். 

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவியதால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் கொரோனா பாதித்தவர்கள் படுக்கை வசதி மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பாட்டார்கள். இதனால், கொரோனா தடுப்புப்பணிகளுக்காக  பொதுமக்களும் தொழிற்துறையினரும் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனையேற்று பலத்துறையினரும் நிதி வழங்கிவந்தனர்.

சினிமாத்துறையில் இருந்து முதன்முறையாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் 1 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். அவரைத்தொடர்ந்து நடிகர்கள் சூர்யா, விக்ரம், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன், இயக்குனர்கள் சங்கர், முருகதாஸ், லிங்குசாமி, சன் பிக்சர்ஸ் என பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தற்போது தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இவர், கமலஹாசன் நடிப்பில் வெளியான ’தூங்காவனம்’, மம்முட்டியின் ’பழசிராஜா’, ’காயங்குள கொச்சுன்னி’, கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ’தனுசு ராசி நேயர்களே’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோகுலம் ஸ்டூடியோ நிறுவனமும் இவருடையதுதான்.