சினிமா

ஏகப்பட்ட நஷ்டம்: சிம்பு, வடிவேலு மீது புகார்!

ஏகப்பட்ட நஷ்டம்: சிம்பு, வடிவேலு மீது புகார்!

webteam

’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தின் பெரும் நஷ்டம் காரணமாக சிம்புவுக்கும் ’இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ பட பிரச்னை தொடர்பாக வடிவேலுக்கும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'அண்ணாதுரை' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், முன்னணி நடிகர் மற்றும் காமெடி நடிகர் ஒருவர் மீது தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார் வந்திருப்பதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல்ராஜா பேசினார். அவர் யார் குறித்து பேசினார் என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. 

இந்நிலையில்  ஞானவேல்ராஜாவின் புகார் குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் விசாரித்த போது,  'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்துக்கு சிம்பு ஒழுங்காக கால்ஷீட் கொடுக்கவில்லை. இதனால் படம் பலத்த நஷ்டத்தைச் சந்தித்தது. இதையடுத்து சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார் அளித்திருக்கிறார். இதற்காக  சிம்புவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். அதே போல  'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்துக்காக வடிவேலு மீது தயாரிப்பாளர் ஷங்கர் புகார் கொடுத்திருக்கிறார். 3 கோடி ரூபாய்க்கு போடப்பட்டுள்ள ’செட்’கள் இதற்காக வீணாக இருக்கிறது. இதுகுறித்து வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்’ என்று தெரிவித்தனர்.