சினிமா

தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு

தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு

Rasus

மார்ச் 1-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கியூப், யுஎஃப்ஓ ஆகிய இரு நிறுவனங்கள்தான் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் டிஜிட்டல் வடிவில் புரஜக்டர்களை நிறுவி வருகின்றன. இதன்மூலமாகத்தான் திரையரங்குகளில் திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. ஆனால் கியூப், யுஎஃஒ நிறுவனங்கள் அதிகக் கட்டணம் விதிப்பதால் அதனை எதிர்த்து வரும் மார்ச் 1ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் முடிவெடுக்கப்பட்டள்ளது.இதனால் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரையுலக அமைப்பினரின் நிலைப்பாடு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.