சினிமா

வருமான வரித்துறையினரிடம் சிக்கிய பிரியங்கா சோப்ரா

வருமான வரித்துறையினரிடம் சிக்கிய பிரியங்கா சோப்ரா

webteam

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனக்கு பரிசாக பெற்ற விலை உயர்ந்த கார் மற்றும் வாட்ச்க்கு வரி செலுத்துமாறு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கடந்த 2011-ஆம் ஆண்டு பிரியங்கா வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எல்.வி.எம்.எச் டேக் வாட்ச், 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டொயேட்டா பைரஸ் கார் ஆகியவற்றுக்கு வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. காரும், வாட்சும் நான் சம்பாதித்து வாங்கியது இல்லை பரிசாகப் பெறப்பட்டது என்று  வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பிரியங்கா சோப்ரா விளக்கம் அளித்தார். அவற்றுக்கு வரிசெலுத்துமாறு வருமான வரித்துறையினர், நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். பரிசுகளுக்கு வரி செலுத்த முடியாது என பிடிவாதம் பிடித்தார் பிரியங்கா. தற்போது அந்தப் பொருள்களுக்கு வரி செலுத்தியே ஆக வேண்டும் என வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.