சினிமா

பிரியங்கா- நிக் ஜோனாஸ் விவாகரத்தா? ஹாலிவுட்டில் பரபரப்பு!

பிரியங்கா- நிக் ஜோனாஸ் விவாகரத்தா? ஹாலிவுட்டில் பரபரப்பு!

webteam

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸூம் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக, செய்தி பரவி வருகிறது.

தமிழில், விஜய் ஜோடியாக அறிமுகமாகி இந்தியில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. இப்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்துவருகிறார். இவர் அங்கு நடிக்கும்போது, தன்னை விட 10 வயது குறைந்த, அமெரிக்க பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்தார்.

 ஆறு மாத காதலுக்குப் பின் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரண்டு பேர் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத் து, ஜோத்பூரில் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. பிரியங்கா சோப்ரா இந்து மதத்தையும், நிக் ஜோனாஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந் தவர்கள் என்பதால் இரண்டு மதங்களின் வழக்கப்படி திருமணம் செய்துகொண்டனர். இதில் இந்தி நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் , தொழில் அதிபர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.

திருமணம் முடிந்த 3 மாதத்துக்குள் அவர்கள் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக, ஓகே (OK magazine) என்ற ஹாலிவுட் பத்திரி கை செய்தி வெளியிட்டுள்ளது. திருமணத்துக்குப் பின் இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை என்றும் வேலை, பார்ட்டிக்குச் செல்வது, ஒன்றாக நேரம் செலவிடுவது உட்பட பல விவகாரத்தில் இருவருக்கும் பிரச்னை என்றும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அவர்கள் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இந்த விவாகரத்துக் கதையில் உண்மையில்லை, அது வெறும் வதந்திதான் என்றும் பிரியங்காவும் நிக் ஜோனாஸூம் குடும்பத்துடன் மியாமியில் விடுமுறையை கழித்து வருவதாகவும் பிரியங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.