பாலிவுட்டின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா தான் நடித்த மேரி கோம் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். பாலிவுட்டில் பல ஹிட் படங்களின் கதாநாயகியாக வலம் வந்தவருக்கு அமெரிக்க சீரியலான "குவாண்டிகோ"வில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து ஹாலிவுட்டில் தயாரான "பே வாட்ச்" படத்திலும் நடித்து புகழ்ப்பெற்றார்.
இப்போது அமெரிக்காவில் தங்கி "குவாண்டிகோ" சீரிஸில் நடித்தக் கொண்டிருக்கும் அவருக்கு, அந்நிய தேசத்தில் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது இளையவரான நிக் ஜோனாஸ் எனும் ஹாலிவுட் பாடகரை காதலித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸூம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக கைகோர்த்தப்படி சென்று வருகின்றனர். இதனையடுத்து இந்தச் செய்தி பாலிவுட்டில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இது குறித்து பிரியங்கா சோப்ராவும், நிக் ஜோனாஸூம் கருத்துக் கூற மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.