சினிமா

ப்ரியா வாரியரின் மனு நாளை விசாரணை

Rasus

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி நடிகை ப்ரியா வாரியர் தாக்கல் செய்த மனுவினை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

ஓமர் லூலூ என்பவரின் இயக்கத்தில் பிரியா வாரியர் நடிக்கும் மலையாள திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இந்தப்படத்தின் 'மாணிக்ய மலரே பூவி' என்ற பாடலில் பிரியாவின் புருவ அசைவுகள் மற்றும் கண் சிமிட்டல்கள் ஒரே நாளில் வைரலானது. அத்துடன் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. ஆனால் இந்தப் பாடல் நபிகள் நாயகத்தை தொடர்புபடுத்தி இஸ்லாமிய மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக ஐதராபாத் காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் உள்ள ஜின்சி காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்யுக்கோரி நடிகை ப்ரியா வாரியர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளைக்கு விசாரணைக்கு வர உள்ளது.