சினிமா

கண் அடிக்க கற்றுக் கொள்ள எத்தனை நாள் ஆனது?: பிரியா வாரியர் பதில்

கண் அடிக்க கற்றுக் கொள்ள எத்தனை நாள் ஆனது?: பிரியா வாரியர் பதில்

webteam

கண் அடிக்கும் காட்சியில் நடிக்க எத்தனை நாள் பயிற்சி தேவைப்பட்டது என்ற கேள்விக்கு நடிகை பிரியா வாரியர் பதிலளித்துள்ளார்.

மலையாள திரைப்படமான ‘ஒரு அடார் லவ்’ படத்தில் வெளியான காட்சிகள் மூலம் ஒரே நாளில் சமூக வலைதளத்தில் பிரபலமானார் நடிகை பிரியா வாரியர். அவர் லேசாக புருவங்களை வில் போல் வலைத்து கண் அடிக்கும் காட்சியை பார்த்த ரசிகர்கள் அவரை உச்சத்தில் வைத்து கொண்டாடி தீர்த்தனர். 

இந்நிலையில் இந்தக் காட்சியில் நடிக்க எத்தனை நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டார் என்ற கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விக்கு இப்போது அவர் பதிலளித்துளார். “படத்தின் இயக்குநர் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் சொன்னதும் அதை அப்படியே புரிந்து கொண்டு நடித்தேன். க்யூட்டாக ஏதாவது செய் என்று இயக்குநர் சொன்னார். அதன்படி செய்தேன்” என்று கூறியுள்ளார்.  மேலும் எத்தனை டேக் தேவைப்பட்டது என்ற கேள்விக்கு, “ஒரே முறைதான் நான் முயற்சி செய்தேன். அந்தக் காட்சியே நன்றாக இருக்கிறது என இயக்குநர் கூறிவிட்டார்” என தெரிவித்துள்ளார்.