சினிமா

கார்த்திக்கு ஜோடியாகிறார் பிரியா பவானி ஷங்கர்

கார்த்திக்கு ஜோடியாகிறார் பிரியா பவானி ஷங்கர்

Rasus

நடிகர் கார்த்தியுடன் பிரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடிக்க உள்ளார்.

செய்தி வாசிப்பாளர்.. சின்னத்திரை நடிகை... வெள்ளித்திரை நாயகி என ஒவ்வொரு படியாக உயர்ந்து தற்போது முன்னணி ஹீரோவுடன் ஜோடியாக நடிக்க உள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர். இந்த தகவலை பிரியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சில தனிப்பட்ட காரணங்களால் படபூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை  சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளது. கார்த்தி நடிப்பில் 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதால், உடனடியாக அடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க2' படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.