தனது இன்ஸ்ட்ராகிராம் மூலம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு நடிகை அமலா பால் மறைமுகமாக பதிலளித்திருக்கிறார்.
விலை மதிப்பு மிக்க சொகுசு கார் வாங்கியதில் விதி மீறல் நடந்திருப்பதாக நடிகை அமலா பால் மீது குற்றசாட்டு எழுந்தது. அவர் வாங்கிய காரை புதுச்சேரியில் அவர் பதிவு செய்ததன் மூலம் இந்த விதி மீறல் நடந்திருப்பதாக கூறப்பட்டது. இதனை விசாரித்து வழக்குப் பதியப்படும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கூறியிருந்தார். அதனை மறுக்கும் விதத்தில் புதுவை போக்குவரத்து அமைச்சர் ஷாஜகான் “விதி மீறல் ஒன்றும் நடக்கவில்லை” என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடிகை அமலாபால் தன் நாய்க்குட்டியுடன் படகில் பயணிப்பதை போல ஒரு புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுவிட்டு,” நான் படகு சவாரியை பரிந்துரை செய்கிறேன். இதில் பயணிப்பதால் சட்டத்தை மீறிவிட்டதாக எந்தக் குற்றச்சாட்டுகளும் எழாது. எனது நலன் விரும்பிகளிடம் ஒன்றிற்கு இரண்டு முறை விசாரித்துவிட்டேன்.” என்று கிண்டல் செய்துள்ளார். மேலும், ”இந்த நகர வாழ்க்கையிலிருந்து, தேவையற்ற யூகங்களிலிருந்து தப்பிக்க வேண்டும் என அடிக்கடி நினைப்பதுண்டு” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.