நடிகர் பிரசாந்த் தெலுங்கு படத்தில் ராம் சரண் தேஜாவுக்கு அண்ணனாக நடிக்கிறார்.
நடிகர் பிரசாந்த் இப்போது ஜானி என்ற படத்தில் நடித்து வருகிறார். வெற்றிச்செல்வன் இயக்கும் இந்தப் படத்தில் அவருடன் சஞ்சிதா ஷெட்டி, ஆனந்த ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அடுத்து அவர் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை போயபதி ஸ்ரீனு இயக்குகிறார். ராம்சரண் தேஜா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு அண்ணனாக பிரசாந்த் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மற்றும் கியாரா அத்வானி, இந்தி நடிகர் விவேக் ஓபராய், சினேகா உட்பட பலர் நடிக்கின்றனர். வசனத்தை ஏ.எம்.ரத்னம் இயக்குகிறார். டி.வி.வி.தனய்யா தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை கடந்த வெள்ளிக்கிழமை ஐதராபாத்தில் நடந்தது. ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.