சிறந்த படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க தயாரிப்பாளர் சங்கம் உதவி செய்யவில்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தில் கட்டப் பஞ்சாயத்து ஊக்குவிக்கப்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்லில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால் சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் நல்லது நடக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். விஷாலுடன், அவரது அணியின் சார்பாக துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன் மற்றும் செயலாளர் பதிவிக்கு போட்டியிடும் மிஷ்கின் உள்ளிட்டோரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.