சினிமா

ஹீரோயின் கிடைக்கலையே: பிரபு சாலமன் வருத்தம்

ஹீரோயின் கிடைக்கலையே: பிரபு சாலமன் வருத்தம்

webteam

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கி இருந்த படம், ‘கும்கி’. சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகிறது. பிரபு சாலமன் இயக்குகிறார். இதில் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி ஹீரோயினாக அறிமுகமாகிறார் என்று தகவல் வெளியானது. இதை மறுத்திருக்கிறார் பிரபு சாலமன். 
அவர் கூறும்போது, ’கும்கி 2’-வுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன. லொகேஷன்கள் பார்த்துவிட்டோம். ஆனால் ஹீரோ, ஹீரோயின் கிடைக்கவில்லை. தேடிக்கொண்டே இருக்கிறேன். கிடைத்ததும் ஷூட்டிங் கிளம்பிவிடுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.