இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடனக் கலைஞர் பிரபுதேவா. ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் கூட முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறார். நடிகராக பல படங்களில் நடித்த பிரபுதேவா, இப்போது ஓடிடியில் அறிமுகமாக இருக்கிறார். ரஃபிக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகும் `சேதுராஜன் IPS' என்ற சீரிஸில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார் பிரபுதேவா. இதற்கான அறிமுக வீடியோவை சமீபத்தில் வெளியிட்டனர்.
இந்த சீரிஸின் கதை தமிழ்நாட்டின் ஒரு கிராமிய பின்னணியில் நடக்கிறது. காவலதிகாரியான பிரபுதேவா, அரசியல் கொலை ஒன்றை விசாரிக்கிறார். அந்த விசாரனையில் ஏற்படும் திருப்பங்களும், வெளிவரும் உண்மைகளும் என உருவாகி இருக்கிறது. இந்த சீரிஸில் தனது கதாபாத்திரம் குறித்து பிரபுதேவா கூறியது, "சேதுராஜன் IPS ஒரு காவலர் மட்டும் அல்ல, கடமை, அடையாளம், அரசியல் ஆகிய புயலில் சிக்கிக்கொள்ளும் மனிதர். இந்தக் கதாபாத்திரம் எனக்கு முந்தைய அனுபவங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, மிகவும் சவாலாக இருந்தது. இந்தக் கதை இன்றைய காலகட்டத்திற்கு தேவையானது என நம்புகிறேன்.” எனக் கூறியுள்ளார்.
இந்த சீரிஸ் சோனி லைவ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.