சினிமா

சிம்பு-தனுஷ் வழியில் பிரபுதேவா!

சிம்பு-தனுஷ் வழியில் பிரபுதேவா!

webteam

ஆல்ரவுண்டராகி அசத்தும் தமிழ் சினிமா ஹீரோக்களில் தற்போது பாடலாசிரியராகவும் ப்ரமோசனாகி இருக்கிறார் பிரபுதேவா.

நடன இயக்குநராக இருந்து நடிகராகி, இயக்குநராகவும் உச்சம் தொட்டவர் இந்திக்குச் சென்றார். போனவுடன் அவர் தொட்டதெல்லாம் பொன்னானது சில காலம் தான்! அடுத்தடுத்து அவர் இயக்கிய சில படங்கள் அட்டர் ப்ளாப் ஆக, மீண்டும் தமிழுக்கு திரும்பிய அவர் அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வருவதோடு ஓரிரு படங்களையும் இயக்கி வருகிறார். அடுத்து அறிமுக இயக்குநர் எம்.எஸ் அர்ஜூன் இயக்கத்தில் யங் மங் சங் படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இந்தப்படத்தில் பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்திருக்கும் அவர், ‘அய்யாமாரு வந்துட்டாங்க.. இங்க பாரு’ என்ற பாடலை எழுதி இருக்கிறார். ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ் இசையமைத்திருக்கும் இந்தப்பாடல் தற்போது கும்பகோணம் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறதாம்.