சினிமா

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கானின் 'தபாங்-3'

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கானின் 'தபாங்-3'

webteam

பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் பல்வேறு சாதனைகளைப் படைத்த படம் 'தபாங்'. 
இந்தப்படத்தின் இரண்டு பாடங்கள் வெளிவந்த நிலையில், தற்போது மூன்றாவது பாகம் தயாராக உள்ளது. தற்போது தமிழில் பிஸியாக நடித்து வரும் பிரபுதேவா இயக்கத்தில் உருவாகவுள்ள 'தபாங்-3' படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குவதாகவும், அடுத்தாண்டு ரம்ஜானுக்கு திரைக்கு வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்பு, ரெமோ டி’செஸ்சா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க இருந்த திரைப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.