சினிமா

பிரபுதேவாவின் ’லக்‌ஷ்மி'க்கு யு சான்றிதழ்!

பிரபுதேவாவின் ’லக்‌ஷ்மி'க்கு யு சான்றிதழ்!

webteam

பிரபுதேவா, பேபி டித்யா பாண்டே, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், கோவை சரளா உட்பட பலர் நடிக்கும் படம், லக்‌ஷ்மி. ஏ.எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பில் ஸ்ருதி நல்லப்பா மற்றும் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு தணிக்கை குழு ஒரு கட் கூட கொடுக்காமல் ’யு’ சான்றிதழ் அளித்துள்ளது.

படம் பற்றி இயக்குனர் விஜய் கூறும்போது, ‘இது நடனத்தை மட்டுமே சுவாசிக்கும் குருவுக்கும், நடனத்தை சுவாசிக்க துடிக்கும் சிஷ்யைக்கும் இடையேயான உண்மையான பிணைப்பை காட்டும் படம். நடனக்கலையை முடிந்த வரை முழுமையாக கொடுத்திருக்கிறோம். படத்தில் என்ன இருக்கும் என்ற ஆவலை டிரைலர், ரசிகர்களுக்கு உருவாக்கி இருக்கும் என நம்புகிறோம். பிரபுதேவா தனது கேரியரில் மிகச்சிறந்த உழைப்பை வழங்கியிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின். பேபி டித்யா சிஷ்யையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் நடனம் சர்வதேச தரத்திலும், எமோஷன் இந்திய தரத்திலும் சிறப்பாக வந்திருக்கிறது’ என்றார்.