Prabhas Fauzi
சினிமா

பிரபாஸின் `ஃபௌஜி' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | Fauzi | Prabhas

ஃபௌஜி படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக இமான்வி நடிக்கிறார். இவர்களுடன் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Johnson

இந்திய சினிமாவின் முக்கியமான நடிகர் பிரபாஸ். இவர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் `ஃபௌஜி' என்ற தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

ஃபௌஜி படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக இமான்வி நடிக்கிறார். இவர்களுடன் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கடுமையான போருக்குப் பிறகு ரத்தக்கறை படிந்தும்.. காயங்களுடனும்... மிகுந்த சோர்வுடனும்.. காணப்படும் அவர் - போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கும் வீரர்களுக்கு மத்தியில் அமைதியாக பிரபாஸ் அமர்ந்திருக்கும் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது போர் சம்பந்தப்பட்ட படமாக உருவாகினாலும், உணர்வுபூர்வமான காதல் கதையாகவும் உருவாகிறது என சொல்லப்படுகிறது.

இந்தப் படம் டிசம்பர் 3ம் தேதி வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும் அனுபவம் சிறப்பானதாகவும் அதிரடியானதாகவும் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதுவரை வெளியாகி உள்ள தகவல்கள்- பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள்- நெஞ்சை தொடும் உணர்வுகள்- கண்கவர் காட்சிகள் மற்றும் உலக தரம் வாய்ந்த தொழில்நுட்பத் திறன் கொண்ட ஒரு திரைப்படமாக இது அமையும் என்பதையே காட்டுகிறது.