பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகியுள்ளது. இதன் தமிழ்ப்பதிப்பின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
படம் பற்றி ராஜமவுலி கூறும்போது, ’பாகுபலி படத்தின் கேரக்டருக்காக நான்கு வருடங்களை செலவழித்திருக்கிறார் ஹீரோ பிரபாஸ். ஒரு கேரக்டருக்காக மூன்று வருடங்களுக்கு மேல் செலவழிக்கும் ஹீரோ யார் இருக்கிறார்கள். அப்படியிருந்தால் காண்பியுங்கள். பிரபாஸும் நானும் 2005-ம் ஆண்டு சத்ரபதி படத்தில் இணைந்தோம். இப்போது வரை எங்கள் நட்பு தொடர்கிறது. இருவரும் சேர்ந்தே அதிகமான நேரங்களை செலவிடுகிறோம். இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் நிச்சயமாக வராது. இருந்தாலும், பாகுபலி கதையை ஒட்டி நிறைய கிளைக் கதைகள் இருக்கிறது. அதை சீரியலாகவோ, நாவலாகவோ சொல்ல முடிவு செய்துள்ளோம்” என்றார்.