சினிமா

பிரபாஸின் அம்மாவைக் கவர்ந்த பூஜா குமார்!

பிரபாஸின் அம்மாவைக் கவர்ந்த பூஜா குமார்!

webteam

தமிழில், காதல் ரோஜாவே, விஸ்வரூபம், உத்தம வில்லன், மீன்குழம்பும் மண்பானையும் படங்களில் நடித்தவர் பூஜா குமார். இவர் டாக்டர் ராஜசேகருடன் தெலுங்கில் நடித்துள்ள ’கருட வேகா’ கடந்த 3 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. 

இதில் 6 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்தார் பூஜா குமார். த்ரில்லர் படமான இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் சிறப்பாக நடித்துள்ளதாக பூஜா குமாரை பலர் பாராட்டி வருகின்றனர். அதில் ஒருவர் ’பாகுபலி’ ஹீரோ பிரபாஸின் அம்மா. பொதுவாக சினிமாவை விட்டு விலகியே இருக்கும் அவரது அம்மா, பூஜாவை பாராட்டியதை எதிர்பார்க்கவில்லை யாரும். 

இதுபற்றி பூஜா கூறும்போது, ’கருடவேகா’ படத்தில் எனது கேரக்டரும் நடிப்பும் பிடித்திருந்தது என்று ’பாகுபலி’ பிரபாஸ் அம்மா பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.