சினிமா

’பாகுபலி’ பிரபாஸை பச்சைக்குத்திய ஜெர்மன் ரசிகைகள்!

’பாகுபலி’ பிரபாஸை பச்சைக்குத்திய ஜெர்மன் ரசிகைகள்!

webteam

பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்து மெகா ஹிட்டான படம், ‘பாகுபலி’. ராஜமவுலி இயக்கிய இந்தப் படம் வசூலில் சாதனை படைத்தது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சாதனை படைத்த இந்தப் படம், சீனா உள்ளிட்ட பல நாடுகளின் பட விழாக்களிலும் கலந்துகொண்டது. இந்தப் படம்  பிராபாஸை, ஆந்திரா தாண்டி அடையாளப்படுத்தி இருக்கிறது.

தெலுங்கு சினிமாவில் ’டார்லிங்’ என்பார்கள் பிரபாஸை. அங்கு அவருக்கு ஏராளமான ரசிகர், ரசிகைகள் இருப்பது வழக்கம்தான். ஆனால், வெளிநாடுகளிலும் இருப்பது ஆச்சரியம்தானே. இந்த ஆச்சரியம், ’பாகுபலி’ படத்துக்கான அவரது ஐந்து வருட உழைப்பு.

சரி, விஷயத்துக்கு வருவோம். பிரபாஸின் உருவத்தை தனது முதுகில் பச்சைக்குத்தி இருக்கிறார்கள் ஜெர்மனி ரசிகைகள் சிலர். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.