சினிமா

விக்ரம் பிரபு மகனுக்கு பிரபாஸ் அனுப்பிய பாகுபலி வாள்!

விக்ரம் பிரபு மகனுக்கு பிரபாஸ் அனுப்பிய பாகுபலி வாள்!

webteam

’பாகுபலி’ படத்துக்குப் பிறகு இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறார் பிரபாஸ். பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை அவருக்கு ஏராளமான ரசிகர்கள். அதில் ஒருவர் நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராத். 
பிரபாஸின் தீவிர ரசிகரான விராத்துக்கு விரைவில் பிறந்த நாள் வர இருக்கிறது. இதற்காக பரிசொன்றை அனுப்பி இருக்கிறார், பிரபாஸ். அந்த பரிசு, பாகுபலியில் அவர் பயன்படுத்திய வாள் போன்ற மாதிரி. அந்த வாளில், விராத் பெயரை குறிப்பிட்டு, அன்புடன் பிரபாஸ் என்று எழுதியுள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் விக்ரம் பிரபு.
விக்ரம் பிரபு நடித்துள்ள ’நெருப்புடா’ நாளை ரிலீஸ் ஆகிறது.