சினிமா

கன்னட சினிமா நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்

EllusamyKarthik

கன்னட சினிமா நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.

கன்னட சினிமா நடிகர் மற்றும் தயாரிப்பாளரான புனித் ராஜ்குமார், மாரடைப்பு காரணமாக பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். உடற்பயிற்சியின்போது திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.   

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் தான் புனித் ராஜ்குமார்.  புனித், 29 படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ளார்.

இதனிடையே அரசியல் கட்சியினர், உறவினர்கள், சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்பட பலர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளதால், மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு, கர்நாடக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.