சினிமா

விஜயின் “பீஸ்ட்” திரைப்பட குழுவுடன் இணைந்த நடிகை பூஜா ஹெக்டே

விஜயின் “பீஸ்ட்” திரைப்பட குழுவுடன் இணைந்த நடிகை பூஜா ஹெக்டே

Veeramani

விஜயின் பீஸ்ட் திரைப்பட குழுவுடன் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர். அதில் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கலந்து கொள்கிறார்.

இவர் ஏற்கனவே கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்ற இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். அதற்கு பிறகு விஜய், செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பூஜா ஹெக்டே மீண்டும்  பீஸ்ட் திரைப்படக்குழுவுடன் இணைந்துள்ளார்.