சினிமா

பி.எம்.டபுள்யூ உடன் பூஜா ஹெக்டே

பி.எம்.டபுள்யூ உடன் பூஜா ஹெக்டே

webteam

புதிய பி.எம்.டபுள்யூ காரை வாங்கியுள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து கொண்டிருக்கும் நடிகை. மிஷ்கினின் முகமூடி மூலம் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக போகவில்லை. அப்படத்தின் தோல்வியால் அதன் இயக்குநர் மிஷ்கினே இந்தப் படத்தை நான் எடுத்திருக்கக் கூடாது என பகிரங்கமாக தோல்வியை ஒப்புக் கொண்டார். பூஜாவுக்கு தமிழில் அதிக வாய்ப்புக்கள் அமையவில்லை. ஆகவே அவர் மற்ற மொழிகளில் கவனம் செலுத்த சென்றுவிட்டார்.

தற்போது தெலுங்கு, கன்னடத்தில் உருவாகி வரும் 'வேட்டகாடு', ஹிந்தியில் சல்மான்கான் நடிக்கும் 'ரேஸ்-3', தெலுங்கில் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படம் என பிஸியாக இருக்கிறார் பூஜா ஹெக்டே. இவர் 2012 ஆண்டிலேயே நடிகையாகி விட்டாலும், இப்போதுதான் பூஜாவின் சம்பளம் லேசாக உயரத்தை தொட ஆரம்பித்துள்ளது. தான் நடித்து சம்பாதித்த பணத்தைக்கொண்டு ஒரு புதிய பி.எம்.டபுள்யூ காரை வாங்கியிருக்கிறார் பூஜா. அந்தப் படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, நீங்கள் உங்களின் கனவு காரை எப்போது வாங்கப் போகிறீர்கள்? உடம்பிலுள்ள ரத்தத்தை, செல்களை செலவழித்து நான் ஒரு பெரிய மூட்டையை வாங்கி இருக்கிறேன் என்று காமெடியாக பதிவிட்டு உள்ளார்.