ரஜினிகாந்த் கோப்புப்படம்
சினிமா

பொங்கல் ரிலீஸாகும் ’தர்மன்’ - ’புருஷன்’.. ரஜினியுடன் மோதும் விஷால்!

ரஜினிகாந்த் படம் வரும் அதே நேரத்தில் தன்னுடைய படத்தை கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் சுந்தர் சி இருப்பதாக சொல்லப்படுகிறது.

Prakash J

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பொங்கல் ரிலீஸ் என்பது மிகப்பெரிய அடையாளம். கூடவே அது ஒரு போட்டிக்களமும்கூட. ஒவ்வொரு வருடமும் பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு என தனிக் கவனம் கிடைக்கும். அப்படி இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் ஆக வர  இப்போதே போட்டி  துவங்கிவிட்டது. ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள `ஜெயிலர் 2' அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் `தர்மன்' ஆகிய இரண்டு படங்கள் ரஜினிக்கு தயாராகி வருகிறது.

rajinikanth

இதில் ஜெயிலர் 2 படத்தை அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதே தேதியில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் `புருஷன்' படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் `புருஷன்' படத்தின் வேலைகள் பாக்கி இருப்பதால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. இருந்தாலும் ரஜினிகாந்த் படம் வரும் அதே நேரத்தில் தன்னுடைய படத்தை கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் சுந்தர் சி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த தொடரையும் படிக்க: சக்கரங்கள் சொல்லும் கதை – 6 | பேட்டரி இதயம் சார்ஜிங் உயிர்நாடி! (EV-யின் ‘கரன்ட்’ ரகசியங்கள்!)

இப்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் `தர்மன்' படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். அந்தப் படத்தோடு `புருஷன்' படத்தை கொண்டுவர முடிவெடுத்திருக்கிறாராம் சுந்தர் சி. தற்போது ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகி வரும் `தர்மன்' படம் துவங்குவதற்கு முன் பல மாற்றங்கள் நடந்ததன.  அதனை ரஜினியே `தர்மன்' பட துவக்க விழாவில், "முதலில் இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. பின்னர் சுந்தர் சி இயக்குவதாக அறிவித்தோம். அதற்கு அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என அறிவித்தோம். அந்தக் கதையில் சில கடினமான விஷயங்கள் இருந்ததால் இப்போது அஸ்வத் சொன்ன கதையை எடுக்கிறோம்" என்றார்.

விஷால்

சுந்தர் சி இந்தப் படத்திலிருந்து விலகினாலும், தன்னுடைய திறமையை  நிரூபிக்கும் வகையில் ரஜினிகாந்த் படத்துடன் தன்னுடைய படத்தை ஒன்றாக வெளியிட நினைக்கிறார் எனச் சொல்கிறது சினிமா வட்டாராம். எனவே தர்மன் - புருஷன் மோதல் என்பது, ரஜினி - விஷால் இடையேயான மோதல் அல்ல. ரஜினி - சுந்தர் சி மோதல். இது உண்மைதானா என்பது இரு படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் தெரியவரும். ஒருவேளை, இந்த க்ளாஷ் நடந்தால் உங்களுடைய சாய்ஸ் எந்தப் படம் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.