சினிமா

மதுரையில் விஜய் ரசிகர்கள் மீண்டும் ஒட்டிய புதிய போஸ்டர்

kaleelrahman

மதுரையில் விஜய் ரசிகர்கள் மீண்டும் ஒரு புதிய போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டதோடு, இளைய தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். நடிகர் விஜயின் ரசிகர்கள் கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பல்வேறு போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள்,

அதன் ஒரு பகுதியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரை விஜய் போன்றும் அவருடைய மனைவி சங்கீதாவை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்றும் சித்திரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டர் தொடர்பாக அமைச்சர்களும் கருத்துக்களை கூறிவந்தனர்.

இந்த நிலையில், ஆஸ்கார் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகர் விஜய் ஆகிய மூவரின் புகைப்படங்கள் அடங்கிய புதிய போஸ்டர் ஒன்றினை விஜய் ரசிகர்கள் மீண்டும் ஒட்டியுள்ளனர். அதில் " பல சதியால் நடந்தது இவங்களுக்கு ஏகப்பட்ட Game - சரி விடுங்க அதுனாலதான் இவங்க வேர்ல்ட் புல்லா Name" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.