பூவை செங்குட்டுவன் எக்ஸ் தளம்
சினிமா

4 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய பெருமைக்குரியவர்.. கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்!

பழம்பெரும் பாடலாசிரியர் கவிஞர் பூவை செங்குட்டுவன் வயது மூப்பு காரணமாக காலமானார்.

PT WEB

பழம்பெரும் பாடலாசிரியர் கவிஞர் பூவை செங்குட்டுவன் வயது மூப்பு காரணமாக காலமானார்.

பழம்பெரும் பாடலாசிரியர் கவிஞர் பூவை செங்குட்டுவன் வயது மூப்பு காரணமாக காலமானார். 60-களின் பிற்பகுதியில் திரைப்படப் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர், சுமார் 4ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். பெரும்பாலும் ஆன்மிகப் பாடல்கள் எழுதுவதில் வல்லமை கொண்ட பூவை செங்குட்டுவன், ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’, ‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை’ என பிரபலமான பல பக்தி பாடல்களை எழுதியுள்ளார்.

பூவை செங்குட்டுவன்

மேலும், தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு அரசியல் பாடல்களையும், எம்ஜிஆருக்கு சினிமா பாடல்களையும் எழுதியுள்ளார். எம்ஜிஆரின் `நான் உங்கள் வீட்டுப்பிள்ளை’ பாடலை எழுதியவரும் பூவை செங்குட்டுவன்தான். இவரது கவிதிறனுக்காக 1980இல் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. அதுமட்டுமின்றி கண்ணதாசன் விருது, கவிஞர் திருநாள் விருது, பாரதியார் விருதுகளையும் பெற்றிருக்கிறார். தற்போது, 90ஆவது வயதில் காலமான செங்குட்டுவனின் உடல் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.