பிரசன்னா- சினேகா தம்பதியினர் கோலிவுட்டின் அழகான ஜோடி என வர்ணிக்கப்டுகின்றனர். சில படங்களில் இணைந்து நடித்த அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2015ஆம் ஆண்டு ஒரு ஆண்குழந்தை பிறந்தது.
ஒருவரை ஒருவர் பொது இடங்களில் பாராட்டிக் கொள்ளும் நிலையில் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் சினேகாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரசன்னா ‘ஹேய் சினேகா, உன்னால்தான் சில உயரங்களை எட்டி வருகிறேன். நான் மேலும் அதை தொடர என் வாழ்க்கையை இயக்கிச் செல்லவேண்டும்’ என தெரிவித்துள்ளார். அதற்கு ரி-டிவிட் செய்துள்ள சினேகா ’ போடா எனக்கு வெட்கம் வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து டிவிட்டரில் அவர்களை பின்பற்றுபவர்கள் சிறப்பான ஜோடி என வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.