சினிமா

மகேஷ்பாபுவுக்கு வில்லன் ஆனது ஏன்? பரத் விளக்கம்

மகேஷ்பாபுவுக்கு வில்லன் ஆனது ஏன்? பரத் விளக்கம்

webteam

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங் உட்பட பலர் நடிக்கும் படம், ஸ்பைடர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் பரத்.

இதுபற்றி பரத் கூறும்போது, ’ஸ்பைடர் ஷூட்டிங் தொடங்கிய 10 நாட்களுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸிடம் இருந்து ஃபோன். அவர் அகமதாபாத்தில் இருந்தார். ‘படத்தில் பவர்புல் வில்லன் கேரக்டர் இருக்கிறது. பாபுலரான ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறோம்’ என்றார். பிறகு கதை சொன்னார். அதில் என் கேரக்டர் பிடித்திருந்தது. இது சரியான வாய்ப்பு என்று நடிக்கிறேன் என்றேன். என் படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டுள்ளது என்றாலும் இந்தப் படம் மூலம் நேரடி தெலுங்கு படத்தில் நடித்த திருப்தியும் கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கில் உருவாகும் படம் இது என்றாலும் மகேஷ்பாபு இரண்டு மொழியிலும் சிறப்பாக பேசக்கூடியவர். ஆனால், எனக்கு தெலுங்கு பேச வராது. படப்பிடிப்பில் நான் பொறுமையாக பேசும் வரை காத்திருந்து அவர் ஒத்துழைப்புக் கொடுத்தார். எப்படி பேச வேண்டும் என்றும் சொல்லிக்கொடுத்தார். இந்தப் படத்தில் நாங்கள் இரண்டு பேரும் மோதியுள்ள சண்டைக்காட்சிகள் மிரட்டும். அதற்கு பீட்டர் ஹெயினுக்கும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்’ என்றார்.