சினிமா

லிபிய சர்வாதிகாரி கடாஃபியுடன் கத்ரீனா கைஃப்.. வைரலாகும் புகைப்படம்

லிபிய சர்வாதிகாரி கடாஃபியுடன் கத்ரீனா கைஃப்.. வைரலாகும் புகைப்படம்

webteam

லிபியாவின் சர்வாதிகாரி மம்மர் கடாஃபியுடன் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

ஷமிதா சிங்கா எனும் மாடல் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் மிகவேகமாக ஷேர் செய்து வருகின்றனர். அந்த புகைப்படத்தில் நடிகை நேஹா துபியா, அதிதி கௌத்ரிகர், அஞ்சல் குமார், ஷமிதா ஷிங்காவும் இடம்பெற்றுள்ளனர்.  15 ஆண்டுகளுக்கு முன்னர் பேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்பதற்காக லிபியா சென்றிருந்தபோது கடாஃபியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் ஷமிதா குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஷமிதா அதை நீக்கி விட்டார். லிபியாவின் சர்வாதிகாரியாக கோலோச்சிய மம்மர் கடாஃபி கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 20ல் கொல்லப்பட்டார்.