‘பேட்ட’ படத்தின் டிரெய்லரில் வரும் டயலாக்குகள் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
‘பேட்ட’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. அதன் தொடக்கத்தில் விஜய் சேதுபதி குரலில், “20 பேரை அனுப்பி வச்சேன் எல்லாரையும் அடிச்சி துவச்சிட்டான்” என ஒரு டயலாக் வருகிறது. இதேபோன்று பல நச் டயலாக்குகள் இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. அவற்றைக் காணலாம்.
“யாருடா அவன் ? பேரு காளி. வேற எந்த டீடெயிலும் தெரியல”
“ஒருத்தன் உக்கார்ந்து இருக்குற தினுச வச்சே சொல்லிருவேன். அவன் ரத்தம் பாத்த பயலா இல்லையானு. இவன பாத்தா சாதாரணமா தெரியல”
“ஒருத்தன், அண்ணே..! யாரோ ஹாஸ்டல் வார்டன்னாம்.. மரண காட்டு காட்டிடான்ணே..!”
“பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த”
“டேய் கொட்டுறா”
“பாக்குறதுக்கு சின்னப் பையன் மாறி ஸ்டைலா இருக்கீங்க”
“ஸ்டைலா இருக்கேனா”
“காதலுக்கு கண்ணு இல்லன்ணே..!”
“சிறப்பான தரமான சம்பவங்கள் இனிமே தான் பாக்க போற”
“இன்னைக்கு சாவனும் ஜித்து”
“ஹே.. ஹே.. ஹெ.. சாத்தியமா சொல்றேன் அடிச்சி அண்டர்வேரோட ஓட விட்டுருவேன். மானம் போனா திரும்பி வராது பாத்துக்கோ”
“ஏய்... எவனுக்காவது பொண்டாட்டி, குழந்தை குட்டினு சென்டிமெண்டு, கின்டிமெண்டு இருந்தா அப்டியே ஓடி போயிரு. கொல காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விட மாட்டேன்”
“ஸ்வீட் சாப்புட போறோம்”