சினிமா

பெப்சி- தயாரிப்பாளர் சங்கங்கள் சுமூகமாக இயங்க வழிவகை செய்ய வேண்டும்: ஆர்கே.செல்வமணி

பெப்சி- தயாரிப்பாளர் சங்கங்கள் சுமூகமாக இயங்க வழிவகை செய்ய வேண்டும்: ஆர்கே.செல்வமணி

webteam

பெப்சி தொழிலாளர் சங்கத்தினரும், தயாரிப்பாளர் சங்கங்கத்தினரும் சுமூகமாக இயங்க வழிவகை செய்ய வேண்டும் என  பெப்சி தலைவர் ஆர்கே.செல்வமணி  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சம்பளப்பிரச்னை தொடர்பாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சி தொழிலாளர் சங்கத்தினருக்கும் மோதல் வெடித்துள்ளது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குறைகூறி வருகின்றனர் இந்நிலையில் பெப்சி சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘நட்புடன் இயங்கி வந்த இரு சங்கங்களுக்கு இடையே பகை போன்ற ஒரு தோற்றம் உருவாகி உள்ளது. தயாருஇப்பாளர்கள் இல்லாமல், பெப்சி தொழிலாளர்கள் இல்லை. அதேபோன்று பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் திரைப்படங்களை உருவாக்க முடியாது என்பது தயாரிப்பாளர்களுக்கும் தெரியும். சில நபர்கள் இரண்டு சங்கங்களுக்கும் இடையே உள்ள பிரச்னைகளை உரசி தீமூட்டி பெரிதாக்கப் பார்க்கின்றனர். அவர்களிடம் இருந்து தமிழ் சினிமாவைக் காப்பாற்ற வேண்டும். பில்லா பாண்டி படப்பிடிப்பில் பயணப்படியையையும் தாண்டி சில பிரச்னைகள் இருந்தது. ஆனாலும், படப்பிடிப்பை நிறுத்தியது தவறுதான். இதற்காக சம்பந்தப்பட்டவர்களை கண்டித்திருக்கிறோம். எங்கள் அமைப்பைச் சேர்ந்த தனபால் என்பவர் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தில் தரம் தாழ்ந்த சில வார்த்தைகளை பிரயோகித்துள்ளார். இதற்காக எங்கள் சங்கத்தின் சார்பில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஆக இந்தப்பிரன்னையை இத்தோடு முடித்துக் கொண்டு இரண்டு சங்கங்களும் பழையபடி சுமூகமாக இயங்க வழிவகை செய்ய வேண்டும். அனைத்துப்பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு ஏற்படும்’எனத் தெரிவித்துள்ளார்.