சினிமா

"கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்" - சிவகார்த்திகேயன் !

"கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்" - சிவகார்த்திகேயன் !

jagadeesh

சாத்தான்குளம் கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களது கடுமையான கண்டனங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்த உயிரிழப்பு நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பதிவில் "இந்தக் கொடூர குற்றத்துக்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அந்த தண்டனை இன்னொரு முறை இது போல நடக்காத வகையில் இருக்க வேண்டும். இது தொடர்பான நடவடிக்கைகள் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.