சினிமா

“தேனீக்கள் கடியுடன் படப்பிடிப்பு நடந்தது" - 'பென்குயின்' குறித்து கீர்த்தி சுரேஷ்...!

“தேனீக்கள் கடியுடன் படப்பிடிப்பு நடந்தது" - 'பென்குயின்' குறித்து கீர்த்தி சுரேஷ்...!

subramani

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் பென்குயின். இதனை அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியிருக்கிறார். ஜோதிகா நடிப்பில் OTT'ல் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்புடன் amazon'ல் வெளியாக இருக்கிறது இத்திரைப்படம். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருக்கிறார். 'நடிகையர் திலகம்' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், 'பென்குயின்' படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். 

ஜூன் 19 அன்று வெளியாகவிருக்கும் இத்திரைப்படம் தொடர்பாக இணையம் வழியே நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கீர்த்தி சுரேஷ் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். "பென்குயின் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்துகொண்டிருந்த போது அங்கு கூட்டமாக வந்த தேனீக்கள் படக்குழுவினர் பலரையும் கடித்து விட்டது." என்றார். மேலும் தன்னையும் தேனீக்கள் துரத்தியதாகவும் ஆனால் தேனீக்களிடமிருந்து தான் தப்பித்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். 

இப்படியான சில நடைமுறை பிரச்னைகளால் படப்பிடிப்பு கேன்சல் செய்யப்பட்டு மீண்டும் நடந்ததாக குறிப்பிட்டுள்ள கீர்த்தி சுரேஷ், “கொடைக்கானல் குளிரில் எனக்கு காய்ச்சலே வந்துவிட்டது.” என்றார். சென்னையில் சில காட்சிகளை எடுக்கும் போது, குளிருக்கான உடைகளைப் போட்டு இங்குள்ள வெயிலில் நடித்ததாகவும். அது ரொம்பவே கடினமாக இருந்தது என்றும் கீர்த்தி சுரேஷ் பென்குயின் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.