சினிமா

‘பென்சில்’ பட இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் காலமானார் - திரைப்பிரபலங்கள் இரங்கல்

webteam

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பென்சில்' படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் மரணம். அவருக்கு வயது 46.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர் மணி நாகராஜ். பின்னர், ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'பென்சில்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர், அடுத்ததாக கோபிநாத், சீதா, வனிதா விஜயகுமார், அனிகா நடிப்பில் 'வாசுவின் கர்ப்பிணிகள்' என்ற படத்தை முடித்து அதன் இறுதிகட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இந்தப் படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இன்று மதியம் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட, வீட்டிலிருந்து மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது இந்த திடீர் மரணம் திரைத்துரையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.